என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேஜிக் நிபுணர் தயாநிதி கல்வி அறிவு சார்ந்த மேஜிக் ஷோவை நடத்தி காட்டினார்.
பள்ளியில் மேஜிக் ஷோ
அவின் ஸ்ரீ பள்ளியில் மேஜிக் ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது
புதுச்சேரி:
திருவண்டார்கோவில் அவின்ஸ்ரீ இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான நுண்ணறிவு திறன் மற்றும் கல்வி சார்ந்த மேஜிக் ஷோ பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
அவின்ஸ்ரீ சி.பி.எஸ்.இ. பள்ளியின் சேர்மன் வாசுதேவன் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பள்ளியின் செயலாளர் ஆனந்தகுமார் தலைமை தாங்கி குத்துவிளக்கினை ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
பள்ளியின் முதல்வர் அலமேலுமங்கை அனைவரையும் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், மாணவர்களின் தனித்திறமையை வளர்த்துக் கொள்ளவும், கல்வி சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளாக நடைபெற்ற இந்த விழாவில், உலகப் புகழ்பெற்ற கோவை மேஜிக் நிபுணர் தயாநிதி கலந்துகொண்டு மேஜிக் ஷோவை நடத்தி காட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Next Story






