என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆற்றில் இருந்து பன்னீர் செல்வத்தின் உடலை மீட்ட போது எடுத்த படம்.
பூக்கடை ஊழியர் ஆற்றில் விழுந்து சாவு
வில்லியனூர் அருகே பூக்கடை ஊழியர் ஆற்றில் விழுந்து இறந்து போனார்.
புதுச்சேரி:
வில்லியனூர் அடுத்த பத்துக்கண்ணு ஆற்றுப் பாலத்தில் தண்ணீரில் ஆண் பிணம் மிதந்தது.
இது குறித்து பொது மக்கள் வில்லியனூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சென்று தண்ணீரில் மிதந்த உடலை மீட்டு கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருக்கோவிலூரை சேர்ந்த பன்னீர்செல்வம் (வயது 47) என்பதும் அவர் பத்துக்கண்ணு சந்திப்பில் பூ கடை ஒன்றில் வேலை செய்ததும். கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு அந்த பகுதியில் சுற்றி வந்தது தெரியவந்தது.
இந்நிலையில் மதுபோதையில் அவர் தவறி பத்துக்கண்ணு ஆற்றில் விழுந்து இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






