என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளிகள் குறித்த விழிப்புணர்வு வகுப்பை ஜான்குமார் எம்.எல்.ஏ. குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்த காட்சி
    X
    மாற்றுத்திறனாளிகள் குறித்த விழிப்புணர்வு வகுப்பை ஜான்குமார் எம்.எல்.ஏ. குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்த காட்சி

    மாற்று திறனாளிகள் குறித்து விழிப்புணர்வு வகுப்பு

    ஆத்திச்சூடி சிறப்பு பள்ளியில் மாற்று திறனாளிகள் குறித்து விழிப்புணர்வு வகுப்பை ஜான்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    புதுச்சேரி:

    ஆத்திச்சூடி சிறப்பு பள்ளி ஸ்வஸ்திக் அறக்கட்டளை  மற்றும் என்.ஐ.இ.பி.எம்.டி. இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான சட்டங்கள் சலுகைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பற்றிய ஒருநாள் விழிப்புணர்வு வகுப்பை நடத்தியது. 

    எல்லைபிள்ளை சாவடியில் உள்ள ஆத்திச்சூடி சிறப்பு பள்ளி வளாகத்தில்   நடைபெற்ற இந்த சிறப்பு வகுப்பை ஜான்குமார் எம்.எல்.ஏ. குத்துவிளக்கேற்றி ெதாடங்கி வைத்தார். ஆத்திச்சூடி சிறப்பு பள்ளியின்  தாளாளர் டாக்டர்  சத்திய வண்ணன் அனைவரையும்  வரவேற்றார். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் ராமச்சந்திரன் மற்றும் தொழிலதிபர் சதீஷ்குமார் ஆகிேயார் சிறப்புரையாற்றினார்கள். அரிச்சுவடி மனநல மையத்தின் இயக்குனர் டாக்டர் இளவழகன் நன்றி கூறினார். 

    இந்த நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பங்குபெற்றனர்.
    Next Story
    ×