என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலை அமைக்கும் பணியை ஏ.கே.டி. ஆறுமுகம் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த காட்சி.
ரூ.13 லட்சம் செலவில் சாலை பணி ஏ.கே.டி.ஆறுமுகம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
புதுவை இந்திராநகர் தொகுதியில்ரூ .13 லட்சம் செலவில் சாலை பணியை அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
புதுவை இந்திராநகர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து தொகுதிக்குட்பட்ட தர்மாபுரி அருண்ணை கண்ணு நகரில் ரூ.5.68 லட்சம் மதிப்பிலும், அகத்தியர் கோட்டம் விரிவாக்கத்தில் ரூ.7.37 லட்சம் மதிப்பிலும் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது.
இதில் அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம்
எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து முத்திரையர்பாளையம் ஜீவாவீதி மற்றும் தர்மாபுரி திரவுபதி அம்மன் கோவில் தெரு விரிவாக்கம் ஆகிய பகுதிகளிலும், இந்திராநகர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய சிமெண்ட் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கும் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் உழவர்கரை நகராட்சி செயற்பொறியாளர், உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர், ஊர் பொதுமக்கள் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story






