search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உப்பனாற்றில் பக்க சுவர் அமைக்கும் பணியை கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு செய்த போது எடுத்த படம்.
    X
    உப்பனாற்றில் பக்க சுவர் அமைக்கும் பணியை கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு செய்த போது எடுத்த படம்.

    பக்க சுவர் அமைக்கும் பணி

    உப்பனாற்றில் பக்க சுவர் அமைக்கும் பணியை கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
    புதுச்சேரி:

    உப்பனாற்றில் ஆட்டுப்பட்டி, வாணரப்பேட்டை, கோலாஸ் நகர், திப்புராயப்பேட்டை பகுதிகளில் பக்கச் சுவர்கள் பழுதடைந்து சரிந்தும் மிகவும் மோசமான சூழ்நிலையில் இருந்தது.

    கனமழையின் போது வெள்ளப்பெருக்கில் சுற்றுசுவர் உடைந்து விழும் அபாயமும் இருந்தது.  இதனை சட்டப்பேரவையில் தி.மு.க. துணை அமைப்பாளரும், உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான  அனிபால் கென்னடி பேசும்போது குறிப்பிட்டார். மேலும் சுற்று சுவரை கட்டித்தர வேண்டும் என ேகாரிக்கை விடுத்தார்.
    இதை கருத்தில் கொண்டு புதுவை ஸ்மார்ட் சிட்டி  நிதியுதவியுடன் சுமார் 26.40 கோடிக்கு பக்கச் சுவர்கள் பலப்படும் திட்டம் சுமார் 815 மீட்டர் நீளத்திற்கு மேம்படுத்துவதற்கான பணி  தொடங்கியது.

    இப்பணியை செய்வதற்காக பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்டம் மூலம் சுமார் ரூ.5.33 கோடி பணி ஆணை வழங்கப்பட்டு இருந்தது. இப்பணியை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    உப்பனாற்றின் மைய பகுதியில் இறங்கி ஆய்வை மேற்கொண்டார். மேலும் மழை காலங்களுக்குள் இதனை மிக விரைவாக செய்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். இதில் தி.மு.க. மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜி, மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளை செயலாளர் செல்வம், மாயவன், பாலாஜி, லாரன்ஸ், மோரிஸ், ரகுமான் ஆகியோர்  கலந்து கொண்டனர்.
    Next Story
    ×