search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொது மக்கள்.
    X
    கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொது மக்கள்.

    இடிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்றுயிடம் கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை

    இடிக்கப்பட்ட வீடுகளில் வசித்த மக்களுக்கு மாற்று இடம் வழங்கக் கோரி அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    அரியலூர்:

    நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, அரியலூர் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வீடுகள் இடிக்கும் பணிகள் அண்மைக் காலமாக நடைபெற்று வருகிறது.  

    இதில் அரியலூர் மேலத் தெரு, குறிஞ்சி ஏரி, எருத்துக்காரன்பட்டி பிராதனச் சாலை(திட்டக்குடி சாலை), ஜயங்கொண்டம் வட்டத்தில் முத்துசேர்வமடம், பிள்ளைப்பாளையம், கங்கவடங்கநல்லூர், செந்துறை வட்டத்தில் நமங்குணம் ஆகிய பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் ஆக்கமிக்கப்பட்டுள்ள வீடுகள் இடிக்கப்பட்டுள்ளது.

    வீடுகளை இழந்த மக்களுக்கு உடனடியாக வீட்டுமனைப் பட்ட வழங்கிட வேண்டும். அதே போல் மாற்று இடம் வழங்காமல் வீடுகளை இடிக்கக் கூடாது என ஊர் மக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மனு அளித்தும், போராட்டத்தில் ஈடுபட்டும் வருகின்றனர்.

    மேலும் மே 6ம் தேதி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்திருந்தனர்.

    அதன்படி நேற்று வெள்ளிக்கிழமை வாலாஜ நகரம் அருகேயுள்ள ராஜீவ்காந்தி நகர் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுத் தலைவர் எஸ்.வாலண்டினா,

    மாவட்டச் செயலர் எம்.இளங்கோவன் ஆகியோர் தலைமையில் திரண்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள்,  அங்கிருந்து பிரதானச் சாலையில் ஊர்வலமாக வந்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அங்கு வந்த காவல் துறையினர் அவர்களிடம் பேசி, 10 பேர் மட்டுமே ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க அனுமதி அளித்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து பெறப்பட்ட 641 மனுக்களை, ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதியிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் அளித்தனர்.

    Next Story
    ×