என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்ட காட்சி.
    X
    ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்ட காட்சி.

    ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு ரூ.39 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள்

    ெஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு ரூ.39 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சீடிஜி எந்திரம், ஹைட்ராலிக் டேபிள், சிரஞ்சி பம்ப், டயா தர்மி எந்திரம், டிஜிட்டல் எக்ஸ்ரே எந்திரம், மல்டி பாரா மானிட்டர், பீட்டர் டாப்ளர், பிளட் ஸ்டோரேஜ் பிரிட்ஜ் உள்ளிட்ட

    பல்வேறு வகையான இயந்திரங்களை அமெரிக்க வாழ் தமிழ்நாடு பவுண்டேஷன் சார்பில் ரூ. 39 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பீட்டில் பவுண்டேஷன் சிஇஓ இளங்கோவன் வழங்கினார்.

    இவற்றை வட அமெரிக்க வாழ் தமிழ்ச் சங்கப் பேரவை தலைவராக  உள்ள மேலணிகுழி கிராமத்தை சேர்ந்த முருகன் கண்ணன் என்பவர் மூலமாக தமிழ்நாடு பவுண்டேஷன் சார்பில் அதன் சிஇஓ இளங்கோவன் வழங்கி துவக்கி வைத்தார்.

    இதில் மேலணிக்குழி ஜி. ராஜேந்திரன், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் டாக்டர் மோகன் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×