என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காமராஜர் நகர் தொகுதியில் சாலை அமைக்கும் பணியினை எம்.எல்.ஏ.க்கள்  வி.பி.ராமலிங்கம், ஜான்குமார் ஆகியோர் தொடங்கி
    X
    காமராஜர் நகர் தொகுதியில் சாலை அமைக்கும் பணியினை எம்.எல்.ஏ.க்கள் வி.பி.ராமலிங்கம், ஜான்குமார் ஆகியோர் தொடங்கி

    ரூ.80 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி

    காமராஜ் நகர் தொகுதியில் ரூ.80 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.
    புதுச்சேரி:

    காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணா நகர், வடக்கு சாலை பகுதிகளை மேம்படுத்த நியமன சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை அமைக்கும் பணியினை ஜான்குமார் எம்.எல்.ஏ. மற்றும் வெங்கடேசன் 
    எம்.எல்.ஏ.  ஆகியோர் பூமி பூஜை செய்து வைத்து தொடங்கி வைத்தனர். 

    இதில் உழவர்கரை நகராட்சி ஆணையர், செயற்பொறியாளர், உதவிப்பொறியாளர், இளநிலை பொறியாளர் மற்றும் பகுதி குடியிருப்போர் நலச்சங்க பிரநிதிகள், கிருஷ்ணாநகர் வார்டு பொறுப்பாளர் அருள்பாபு கலந்து கொண்டனர். 

    இதேபோல் காமராஜ் நகர் தொகுதிக்குப்பட்ட ரெயின்போ நகர், 7-வது குறுக்குவீதி மற்றும் அன்னை நகர் சாலை பகுதிகளை மேம்படுத்துவதற்கு நியமன எம்.எல்.ஏ.  வி.பி.ராமலிங்கம் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து. ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை அமைக்கும் பணியினை எம்.எல்.ஏ.க்கள் வி.பி.ராமலிங்கம், ஜான்குமார் ஆகியோர் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.
    Next Story
    ×