என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
எழுத்தர் பணி நியமன தேர்வு வயது வரம்பை குறைப்பதா? அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கேள்வி
இளநிலை எழுத்தர் பணி நியமன தேர்வுக்கு வயது வரம்பை குறைப்பதா? அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரி
புதுவை மாநில தி.மு.க. துணை அமைப்பாளரும் உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிபால் கென்னடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக இளநிலை எழுத்தர், முதுநிலை எழுத்தர் பணியிடங்கள் நூற்றுக்கணக்கானவைகள் காலியாக இருந்து வருகிறது. முதல்-அமைச்சராரக பதவியேற்ற ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் காலி பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும் என்று வாக்குறுதி அளித்தனர்.
அதன் அடிப்படையில் பல்வேறு பணியிடங்கள் நிரப்புவதற்கு அரசு முயற்சித்து வருகிறது. தற்பொழுது புதுவை அரசின் நிர்வாகத் துறையின் மூலம் இளநிலை எழுத்தர் பணி பதவி இடங்களை நிரப்புவதற்கு பூர்வாங்கப்பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் எழுத்தர் பணி நியமன விதிகள் திருத்தப்பட்டு நிர்வாகத் துறையின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.ஆனால் தற்பொழுது பொது நிர்வாகத்துறை கடந்த 28.11.2016 அன்று வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட நியமன விதிகளின்படி 18 வயது முதல் 30 வயது வரை வயது வரம்பை குறைத்து இளநிலை எழுத்தர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது கடந்த 2.12.2011 புதுவை அரசின் நிர்வாகத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி இளநிலை எழுத்தர் பணிக்கு 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது அதன்பின்பு இட ஒதுக்கீடு பிரிவினருக்கும்வயது சலுகை அடையும் வகையில் அறிவிக்கை செய்து பணி நியமனம் நடைபெற்றது.
கடந்த 2012-ம் ஆண்டிற்கு பிறகு புதுவை அரசில் எந்த பணி யிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளதால் 10 ஆண்டு காலம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் மிகவும் வறுமையான சூழ்நிலையில் தவித்து வருகின்றனர்.இந்த நிலையில் இளநிலை எழுத்தர் பணிக்கு வயது வரம்பினை குறைத்திருப்பது எந்த விதத்தில் நியாயமானது என்று தெரியவில்லை.
இந்த இளநிலை பணியிடங்களுக்கு வயது வரம்பு நிர்ணயிப்பது புதுச்சேரி மாநில முதல்-அமைச்சர் அதிகாரத்துக்கு உட்பட்டதாகும்.
இம்மாதிரியான நியமன விதிகள் திருத்தப்படு ம்போது மாநில முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வராமல் 2016-ம் ஆண்டு திருத்தப்பட்ட நியமன விதிகளின்படி வெளியிடுவதற்கு யாரோ சிலர் முயற்சித்து வருகிறார்கள்.
இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் கடந்த 10 ஆண்டு காலமாக வேலைவாய்ப்பு எதுவும் இல்லாமல் இருப்பதை கவனத்தில் கொண்டு 2011-ம் ஆண்டு தங்களால் கொண்டுவரப்பட்ட நியமன விதிகளின்படி அதாவது 18 வயது முதல் 32 வயது வரை இளநிலை எழுத்தர் பணிக்கு தேர்வு செய்ய நியமன விதிகளில் திருத்தம் செய்து அறிவிக்க வேண்டும் எனபுதுவை மாநில தி.மு.க. சார்பில் வேண்டுகோள் வைக்கின்றேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. குறிப்பிட்டுள்ளார்.
Next Story






