என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    அ.தி.மு.க.வின் குற்றசாட்டுகளுக்கு அரசு பதில் அளிக்க வேண்டும்- சிவா எம்.எல்.ஏ. அறிக்கை

    கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வின் குற்றசாட்டுகளுக்கு அரசு பதில் அளிக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சிவா கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு..க அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும்  அ.தி.மு.க.வே இந்த ஆட்சியில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை என்று தெள்ளத் தெளிவாக புட்டுப்புட்டு வைத்துள்ளது. அதுபோல் வேளாண்துறை அமைச்சரும் இந்த ஆட்சியில் விவசாயிகள் நிம்மதியாக இல்லை என்று கூறியுள்ளார்.

    புதுவை அனைத்து துறையிலும் வளர்ச்சி பெற்று வருவதாக கவர்னர் கூறுகிறார், அதேசமயம் முதல்-அமைச்சர் புதுவைக்கு மாநில அந்தஸ்து கொடுக்காததால்  வளர்ச்சி அடையவில்லை என்கிறார், இதில் எது உண்மை என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

    புதிய அரசு அமைந்து எந்த வளர்ச்சியும் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் மக்கள் வேலை வாய்ப்பையும்,  வருமான வாய்ப்பையும் இழந்து வருகின்றனர். 

    தனிமனித ஏற்றத்தாழ்வுகளும் பிராந்திய ஏற்றத்தாழ்வுகளும் மேலோங்கி வருகின்றன, எனவே புதுவை வளர்ந்து வருகிறது என்று கூறுவது வளர்ச்சியைப்பற்றிய புரிதல் இல்லாததாகும்.

    விவசாய உற்பத்தித்திறன் உயரவில்லை,  விளை பொருளுக்கு நல்ல விலை கிடைக்காததால், விவசாயிகள் நிம்மதியாக வாழ முடியவில்லை என்று வேளாண்துறை அமைச்சரே குறை கூறுகிறார்.  எதிர்க்கட்சிகளுக்கு பதில் அளிக்காவிட்டாலும் தற்போது கூட்டணி கட்சியான அ.தி.மு..க கூறியதற்கும், அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவரே கூறியதற்கும் இந்த அரசும், கவர்னரும் பதில் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு சிவா அறிக்கையில் கூறியுள்ளார்.
    Next Story
    ×