என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் இடிக்கும் போது எடுத்தப்படம்.
    X
    ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் இடிக்கும் போது எடுத்தப்படம்.

    சாலையை ஆக்கிரமித்து கட்டிய 5 வீடுகள் இடிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    எருத்துக்காரன் பட்டி ஊராட்சியில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 5 வீடுகள் இடிக்கப்பட்டன.
    அரியலூர்:

     அரியலூர் அடுத்த எருத்துக்காரன் பட்டி ஊராட்சியில் சாலை யை ஆக்கிரமித்து கட்ட ப்பட்டிருந்த 5 வீடுகள் இடிக்கப்பட்டன.

    எருத்துகாரன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட திட்டக்குடி சாலையை ஆக்கிரமித்து 5 குடும்பத்தினர் வீடுகளை கட்டி வசித்து வருகின்றனர்.உயர்நீதிமன்றம் உத்தரவுப் படி, நீர் நிலையங்கள் மற்றும் சாலை ஆக்கிரமிப்புகளை தமிழக அரசு அகற்றி வருகிறது.

    அதன்படி, அரியலூர் எருத்துக்காரன் பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட திட்டக்குடி சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை காலி செய்யுமாறும், சம்மந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர்களுக்கு வருவாய்த்துறையினர் தெரிவித்தும் யாரும் காலி செய்யவில்லை.

    இந்நிலையில் வட்டாட்சியர் ராஜமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் அகிலா ஆகியோரின் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் முன்னிலையில் மேற்கண்ட சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 5 வீடுகளை 2 ஜேசி இயந்திரம் மூலம் ஆகற்றப்பட்டது.

    வீடுகள் இடிப்பதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் தாங்களாகவே முன்வந்து வீட்டில் இருந்த பொருள்களை அப்புற ப்படுத்திக்கொண்டனர்.

    Next Story
    ×