என் மலர்
உள்ளூர் செய்திகள்

53 அடி உயர மாதா வெண்கல சிலை
ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் 53 அடி உயர மாதா வெண்கல சிலை திறப்பு
ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் 53 அடி உயர மாதா வெண்கல சிலை திறக்கப்பட்டது
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சியில் அருள்நிறை அடைக்கல அன்னை திருத்தலம் உள்ளது. வீரமா முனிவரால் கட்ட ப்பட்ட புகழ் பெற்ற இத்திருத்த லத்துக்கு நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இக்கோயிலில் பிரம்மாண்டமாக உலோக த்தலான மாதா முழு உருவ சிலை அமைக்க வேண்டும் என திருத்தல நிர்வாகம் முடிவு எடுத்தது. அதன்படி சிலையை தயார் செய்யும் பணியை கும்பகோணத்தை அடுத்த சுவாமி மலையிலுள்ள பிரவீன் ஸ்தபதியிடம் ஒப்படைத்தனர்.
ஏலாக்குறிச்சி திருத்தல வளாகத்திலேயே வெண்கலத்தால் 53 அடி உயரத்தில் பிரம்மா ண்டமான மாதா சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பணி கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கி தற்போது முடிக்கப்பட்டு இன்று ஏலாக்குறிச்சி ஆலய வளாகத்தில் திறப்பு விழா நடைபெற்றது.
கிறிஸ்தவ பாடல்களல் ஒன்றான ஜெயமாலை மன்றாட்டிலுள்ள 53 மந்திரங்களின் அடிப்படை யில் 53 அடி உயரத்தில் 380 பகுதிகளாக வார்ப்பு ஊற்றி 12 விண்மீன் முடிகள், ஜெபமாலை, உத்ரியம், காதணியுடன் தமிழ் பெண் அழகின் அமைப்பில் சிலை செய்யப்பட்டுள்ளது.
இச்சிலை 53 அடி உயரத்தில் 19 டன் எடையில் ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பில் பித்தளை, செம்பு, வெண்கலம் மற்றும் தங்கம் உள்ளிட்ட உலோகங்களால் செய்யப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று ஏலாக்குறிச்சி தருத்தல வளாகத்தில் நடைபெற்றது.
Next Story






