என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய தலைமை செயலாளர் ராஜுவ் வர்மாவிடம் பொறுப்புகளை ஒப்படைத்த அஸ்வனி குமார் பூங்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித
    X
    புதிய தலைமை செயலாளர் ராஜுவ் வர்மாவிடம் பொறுப்புகளை ஒப்படைத்த அஸ்வனி குமார் பூங்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித

    புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் வர்மா பொறுப்பேற்றார்

    புதுச்சேரியில் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் வர்மா பொறுப்பேற்றார்.
    புதுச்சேரி:

    புதுவை தலைமைச் செயலாளராக இருந்த அஸ்வனி குமாருக்கும் ஆட்சியாளர்களுக்கும் மறைமுகமாக மோதல் நீடித்து வந்தது.  

    இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 20-ந் தேதி புதுவை தலைமைச் செயலாளரை டெல்லிக்கு இடமாற்றம் செய்து உத்தர விட்டது. புதுவை தலைமை செயலர் அஸ்வனி குமார் டெல்லிக்கும், அருணாச்சலப் பிரதேச ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜீவ்வர்மா புதுவைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். 

    நீண்டநாள் ஆளும் அரசு தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை மத்திய உள்துறை நிறைவேற்றியதாக கூறப்பட்டது. ஆனால் 5 ஆண்டுகளாக அஸ்வினி குமார் புதுவையில் இருந்த தால்தான் அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். 

    புதுவைக்கு வந்த புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் வர்மாவிடம் தனது பொறுப்புகளை அஸ்வனிக்குமார் ஒப்படைத்து அவருக்கு பூங்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்தார். 

    தொடர்ந்து, அஸ்வனி குமார் கவர்னர் தமிழிசையை சந்தித்தும் விடை பெற்று டெல்லி சென்றார்.
    Next Story
    ×