என் மலர்
உள்ளூர் செய்திகள்

பட்டியலின-பழங்குடியினர் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம் செய்த போது எடுத்த காட்சி.
பட்டியலின-பழங்குடியினர் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
புதுவை பல்கலைகழகத்தில் பட்டியலின-பழங்குடியினர் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
புதுச்சேரி
புதுவை பல்கலைகழக பட்டியலின மற்றும் பழங்குடியினர் ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில் பல்கலைக்கழக 2-ம் நுழைவு வாயில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்கத் தலைவர் குருநாதன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ரவி வரவேற்றார். நிர்வாகிகள் கணேசன், நாகமுத்து, ராமு, சாந்தசீலன், ராகுல் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பல்கலைக்கழக ஆசிரியர் அல்லாத ஊழியர் நலச்சங்கத் தலைவர் கலிய பெருமாள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அரசு ஊழியர் ஐக்கிய பேரவையின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் கடலூர் பாவாணன் கண்டன உரையாற்றினார்.
பல்கலைக் கழகத்தில் பதவி உயர்வு குழு கூட்டத்தை கூட்டி அனைவருக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும். விடுபட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் சி.ஏ.எஸ். உடனே நடத்தப்பட வேண்டும். தொலைதூர கல்வி இயக்ககத்தின் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Next Story