என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
![பாரதிதாசன் சிலைக்கு கவர்னர் தமிழிசை மாலை அணிவித்தபோது எடுத்த படம். பாரதிதாசன் சிலைக்கு கவர்னர் தமிழிசை மாலை அணிவித்தபோது எடுத்த படம்.](https://img.maalaimalar.com/Articles/2022/Apr/202204291540477607_Tamil_News_Pondicherry-NewsPut-the-name-plate-in-TamilLG-Tamilisai_SECVPF.gif)
X
பாரதிதாசன் சிலைக்கு கவர்னர் தமிழிசை மாலை அணிவித்தபோது எடுத்த படம்.
தமிழில் பெயர் பலகை வையுங்கள்-தமிழிசை வேண்டுகோள்
By
மாலை மலர்29 April 2022 3:40 PM IST (Updated: 29 April 2022 3:40 PM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
நிறுவனங்கள்-கடைகளில் தமிழில் பெயர் பலகை வையுங்கள் என கவர்னர் தமிழிசை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை அரசின் செய்தித்துறை சார்பில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி சட்டசபை அருகே உள்ள பாரதிதாசன் சிலைக்கு கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சந்திரபிரியங்கா, சாய்.ஜெ.சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், லட்சுமிகாந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதைதொடர்ந்து கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
புரட்சி கவிஞர் பாரதிதாசன் நமக்கு புதுவைக்கு தமிழ்தாய் வாழ்த்தை வழங்கியவர். அவர் தமிழக வீதிகளில் தமிழ் இல்லை என்று கூறியிருந்தார்.
இதனால் நான் வேண்டு கோளாக வைக்கிறேன். புதுவையில் நிறுவனங்கள்-கடைகளில் பெயர் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும். இதை அரசு கட்டாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை. நாமாகவே முன்வந்து தமிழில் பெயர் பலகைகளை வைக்க வேண்டும்.
முதல்-அமைச்சருடன் ஆலோசனை நடத்தி இது தொடர்பாக குறிப்பாணை வெளியிடப்படும். குழுந்தைகளுக்கு தமிழில் பெயரை சூட்டுங்கள். புரியாத மொழிகளில் பெயர்களை சூட்டுவதை விட தமிழில் பெயர்சூட்டி அழை
யுங்கள். பாரதிதாசனின் நினைவு நாள், பிறந்தநாளை அரசு சார்பில் கொண்டாடுகிறோம். மேலும் அவருக்கு விழாக்களை கொண்டாட திட்டமிட்டுள்ளோம். தமிழ் அறிஞர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்.
தமிழை பாராட்டுவோம் சீராட்டுவோம். புதுவை யில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் தரப்படுகிறது. தமிழ் தாய் வாழ்த்து இல்லாமல் எந்த அரசு நிகழ்ச்சியும் தொடங்கப்படுவது இல்லை.
இவ்வாறு தமிழிசை கூறினார்.
பின்னர் பெருமாள்கோவில் வீதியில் உள்ள பாரதிதாசன் நினைவு
இல்லத்துக்கு கவர்னர் தமிழிசை சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)