என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெயங்கொண்டம் நேஷனல் கல்லூரியில் அரசு போட்டித் தேர்வு மையம் தொடக்க விழா நடந்த போது எடுத்த படம்.
    X
    ஜெயங்கொண்டம் நேஷனல் கல்லூரியில் அரசு போட்டித் தேர்வு மையம் தொடக்க விழா நடந்த போது எடுத்த படம்.

    நேஷனல் பாலிடெக்னிக் கல்லூரியில் அரசு போட்டி தேர்வு மைய துவக்க விழா

    ஜெயங்கொண்டத்தில் நேஷனல் பாலிடெக்னிக் கல்லூரியில் அரசு போட்டி தேர்வு மைய துவக்க விழா நடை பெற்றது.
    அரியலூர்:


    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நேஷனல் பாலிடெக்னிக் கல்லூரியில் அரசு போட்டி தேர்வு மைய துவக்க விழா நடை பெற்றது.

    விழாவிற்கு கல்லூரி முதல்வர் அன்பரசி தலைமை தாங்கினார். முன்னதாக வணிகவியல் துனணத்தலைவர் கோபிநாத் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியை ஒருங்கி ணைப்பாளர் தமிழ்த்துறை தலைவர் சண்முகநாதன் வழி நடத்தினார். நிகழ்ச்சி க்கு கல்லூரி குழும இய க்குனர் மனோபாலன், கல்லூரி செயலாளர் சங்க ரநாராயணன், இணைச் செயலாளர் கருணாகரன், கல்லூரி நிர்வாக இணை இயக்குனர் அமீர்தேவ்ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர்.  

    நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அரியலூர் அரசினர் கலைக்கல்லூரி கணினி அறிவியல்உதவி பேராசிரியர்  செல்வகுமார் சிறப்புரையாற்றினார்.  

    நிகழ்ச்சியில் போட்டி தேர்வு பயிற்றுநர்கள் அனை த்து துறை பேராசிரியர்கள் என 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    முடிவில் இயற்பியல் துறை தலைவர் வெற்றி கொடி நன்றி கூறினார்.

    Next Story
    ×