என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILE PHOTO
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம்
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் வரும் மே 1-ந் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என்று மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்த கிராம சபைக் கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், சுகாதாரம் (பள்ளி கழிப்பறைகள் மற்றும் அங்கன்வாடி மையக் கழிப்பறைகள்).
ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விபரங்கள் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம். ஊட்டச்சத்து இயக்கம். பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), விரிவான கிராம சுகாதார திட்டத்தைப் பற்றி விவாதித்தல், ஜல் ஜீவன் திட்டம், வேளாண்மை - உழவர் நலத்துறை, நமக்கு நாமே திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
எனவே அன்றைய தினம் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் அந்தந்த பகுதிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், சமுதாய அமைப்பு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story