என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெயங்கொண்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடை பெற்ற போது எடுத்த படம்.
    X
    ஜெயங்கொண்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடை பெற்ற போது எடுத்த படம்.

    ஜெயங்கொண்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி

    ஜெயங்கொண்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பிராஞ்சேரி ஊராட்சி விழப்பள்ளம் கிராமத்தில் புனித செபஸ்தியார் ஆலயத்தின் முன்பாக  ஜல்லிக்கட்டு போட்டி நடை பெற்றது.

    இதற்கான ஏற்பாடுகளை கிராம நாட்டார்கள் மற்றும் பொதுமக்கள் விழா கமிட்டியினர் இணைந்து ஏற்பாடுகளை செய்திருந்தனர்.   ஜல்லிக்கட்டு வீரர்கள் முன்னதாக ஜல்லிக்கட்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.  

    முதல் காளையாக கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. முன்னதாக அனைத்து காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

    இதே போல் மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரி சோதனைக்கு உட்படுத்தப்பட்ட சுழற்சி முறையில் அனுமதிக்கப்ப ட்டனர்.
    அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்க போலீசார் பலத்த பாது காப்பு பணியில் ஈடு பட்டுத்தப்பட்டனர். ஜல்லிக்கட்டு விழாவில் மாடுபிடி வீரர்கள் 200 பேர் கலந்துகொண்டு சீறிப்பா ய்ந்து வந்த காளைகளை அடக்கினர்.  

    இதில் மூன்று பிரிவு களாக மாடுபிடி வீரர்கள் தனித்தனியே மாடு பிடிக்க களம் இறக்கப்பட்டனர். 600க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.   

    ஜல்லிக்கட்டை உடையார்பாளையம் ஆர்டிஓ பரிமளம் துவக்கி வைத்தார். சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பொது மக்கள் கண்டு களித்தனர்.

    மாடுபிடி வீரர்களுக்கு கட்டில் நாற்காலி சைக்கிள் உள்ளிட்ட பொருட்களை வழங்கப்பட்டது.பிடிபடாத காளைகளுக்கு காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


    Next Story
    ×