search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    பள்ளிகளில் செய்முறை தேர்வுகள் தொடக்கம்

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் செய்முறை தேர்வுகள் தொடங்கப்பட்டுள்ளது.
    அரியலூர்: 

    தமிழகத்தில் கொரோனா தோற்று குறைந்ததன் காரணமாக எஸ்.எஸ்.எல்.சி. பிளஸ் 1 பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நேரடியாக நடைபெறுமென பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. 

    பொதுத் தேர்வுகள் எழுத உள்ள மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் மே 2ம் தேதிக்குள் முடித்து மே4ம் தேதிக்குள் மதிப்பெண்கள் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என அரசு தேர்வுகள் இயக்கம் உத்தரவிடப்பட்டுள்ளது.
    அரியலூர் மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வு மே 6 ஆம் தேதி துவங்கி மே 30 ந் தேதி முடிவடைகிறது. 54 தேர்வு மையங்களில் 5519மாணவர்களும், 5149 மாணவிகளும் மொத்தம்10668 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். 

    பிளஸ் 1 தேர்வு மே 10 ந் தேதி துவங்கி மே 31 ந் தேதி முடிவடைகிறது 39 தேர்வு மையங்களில் 4660மாணவர்களும், 4831 மாணவிகளும் மொத்தம்9491 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள், பிளஸ் 2 தேர்வு மே 5 ஆம் தேதி துவங்கி மே 28ஆம் தேதி முடிவடைகிறது. 

    39தேர்வு மையங்களில் 4035மாணவர்களும், 4760 மாணவிகளும் மொத்தம்8795 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.  

    பொதுத்தேர்வுகள் நடைபெறுவதை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி கண்காணிப்பு குழு தலைவராகவும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் துணை தலைவராகவும், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட போலீஸ் எஸ்பி, 

    அரியலூர், உடையார்பாளையம் ஆர்டிஓ, பொதுப்பணித்துறை, மின்சார வாரியம், அரசு போக்குவரத்து கழகம், அரியலூர், உடையார்பாளையம், செந்துறை கல்வி மாவட்ட அதிகாரிகளை கொண்ட கண்காணிப்பு குழு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

    பொதுத்தேர்வு மையங்களுக்கு சரியான நேரத்திற்கு வர வேண்டும், செல்போன் கொண்டு அனுமதி கிடையாது, தேர்வு மையத்திற்குள் அவரவர் ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர வேண்டும், துண்டு சீட்டு வைத்து காப்பி அடித்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×