என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுப்பணித்துறை அதிகாரியிடம்  நேரு எம்.எல்.ஏ. பேசிய காட்சி.
    X
    பொதுப்பணித்துறை அதிகாரியிடம் நேரு எம்.எல்.ஏ. பேசிய காட்சி.

    பாதாள சாக்கடை அடைப்புக்கு நிரந்தர தீர்வு

    பாதாள சாக்கடை அடைப்புக்கு நிரந்தர தீர்வு காண பொதுப்பணித்துறை அதிகாரியிடம் நேரு எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
    புதுச்சேரி:

    புதுவை பொதுப்பணித்துறை பொது சுகாதார கழுநீர் உட்கோட்ட பிரிவு உதவி செயற்பொறியாளர் வைத்தியநாதனிடம் நேரு எம்.எல்.ஏ.   பாதாள சாக்கடை அடைப்புகளை பற்றி புகார் செய்தார்.

    உருளையான்பேட்டை தொகுதியின் பல பகுதிகளில் பாதாள சாக்கடை அடைப்புகள் ஏற்படுகிறது.இதற்கு நிரந்தர தீர்வு  காணவும் மற்றும் பாதாள சாக்கடை தொட்டிகளில் உள்ள கழிவுகளை  தூர்வாருதல் போன்ற பணிகளை மேற்கொள்ள  வேண்டும் என  கேட்டுக் கொண்டார்.

    ஆலோசனையின் போது பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் சங்கர், தனசீலன் மற்றும் மனிதநேய மக்கள் சேவை இயக்கத்தை சேர்ந்த குணசேகரன், வேலாயுதம், ஆதி, சிவராமன், காமராஜ், தர்மேஷ், பாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×