என் மலர்
உள்ளூர் செய்திகள்

குருவாலப்பர் கோவில் தனியார் மண்டபத்தில் தமிழ் மக்கள் பண்பாட்டு கலை நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம்.
அரசியல் சட்ட வரம்பை மீறி தொடர்ந்து ஆளுநர் செயல்பட்டு வருகிறார்
அரசியல் சட்ட வரம்பை மீறி தொடர்ந்து ஆளுநர் செயல்பட்டு வருகிறார் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் தெரிவித்துள்ளார்.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள குருவாலப்பர் கோவிலில் தமிழர் நீதி கட்சி சார்பாக தமிழ் மக்கள் பண்பாட்டு கலைவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை தமிழர் நீதி கட்சி நிறுவன தலைவர் ஏர் உழவர் சங்க நிறுவனருமான சுபா இளவரசன் தலைமை தாங்கினார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் விழாவை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது-,
தமிழக ஆளுநர் அரசியல் சட்ட வரம்பை மீறி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். நமது மாநிலத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் துறை தலைவர்களை பேராசிரியர்கள் எல்லோரையும் அழைத்து ஒரு மாநாடு நடத்துகிறார். இந்த மாநாடு நேற்றும் இன்றும் உதகமண்டலத்தில் நடைபெறுவதாக ஆளுநர் மாளிகையில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் அரசியல் சட்டத்தை மீறி செயல்படுவது கண்டிக்கத்தக்கது. இந்த மாநாட்டில் எந்த துணைவேந்தரும் பேராசிரியரும் பங்கேற்கக் கூடாது என்று அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இதை இப்பொழுது அனுமதித்தால் இதனுடைய பின் விளைவுகள் மோசமாக இருக்கும்.
மேலும் மேலும் நமது மாநிலத்தின் கல்வித்துறையில் ஆளுநர் தன்னிச்சையாக அதிகாரம் செலுத்த தொடங்குவார் அதற்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்,
மத்திய பா.ஜ.க. அரசில் தூண்டுதலினாலே கவர்னர் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார் என்று பேசினார். முன்னதாக கூட்டத்தில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு.மாமன்னன் ராஜேந்திர சோழன், தமிழரசன், நம்மாழ்வார், கற்புக்கரசிகண்ணகி,
வேலுநாச்சியார், வள்ளலார் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் தலைமை நிலைய செயலாளர் மதியழகன் நன்றி கூறினார்.

Next Story