என் மலர்
உள்ளூர் செய்திகள்

முன்னாள் அரசு கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வத்திடம் விருப்பம் மனு கொடுத்த போது எடு
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பதவிக்கு 3 பேர் போட்டி
மாவட்ட செயலாளர் பதவிக்கு முன்னாள் அரசுகொறடா உட்பட 3 பேர் போட்டியிடுகின்றனர்.
அரியலூர்:
அரியலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள் உட்கட்சி தேர்தல் விருப்ப மனு வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை கழக அறிவிப்பின்படி இலக்கிய அணி செயலாளரும் செய்தி தொடர்பாளருமான வைகைச்செல்வன், முன்னாள் அமைச்சரும் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளருமான ராமலிங்கம்,
பிரிவு துணைச் செயலாளர் கணேசமூர்த்தி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளர் பழனிவேல், ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாவட்டச் செயலாளரும் முன்னாள் அரசு கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன், தா.பழுர் ஒன்றிய கட்சி நிர்வாகி பழனிவேல், மாவட்ட ஊராட்சி குழு தலைவரும் முன்னாள் வர்த்தக அணி செயலாளருமான சந்திரசேகர், ஆகியோர்கள் மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தனர்.
மாவட்ட தலைவர், மாவட்ட பொருளாளர், மாவட்ட இணைச் செயலாளர், மாவட்ட துணைச் செயலாளர் பொதுக்குழு உறுப்பினர், பதவிக்கு போட்டியிட 11 பேர்கள் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.

Next Story