என் மலர்
உள்ளூர் செய்திகள்

மசோதவை வாபஸ் பெறக்கோரி போக்குவரத்து சம்மேளனம் போராட்டம் நடந்த காட்சி.
போக்குவரத்து சம்மேளனம் போராட்டம்
மசோதவை வாபஸ் பெறக்கோரி போக்குவரத்து சம்மேளனம் போராட்டம் நடந்தது.
புதுச்சேரி:
புதுவை சி.ஐ.டி.யூ. சாலை போக்குவரத்து சம்மேளனம் சார்பில் கடலூர் சாலை உழைப்பாளர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யூ. செயலாளர் மதிவாணன் தலைமை வகித்தார். செயலாளர் சீனுவாசன் கண்டன உரையாற்றினார்.
நிர்வாகிகள் ராமசாமி, கொளஞ்சியப்பன், ரவிச்சந்திரன், மணிபாலன், ராஜ்குமார், பனிமலர், ராஜா, விஜயகுமார், அந்தோணி தாஸ், சத்தியமூர்த்தி, மருதப்பன், மனோகர் உட்பட பலர் கலந்துகொண்டனர். மத்திய அரசு பொது போக்குவரத்து தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களை அப்புறப்படுத்தி கார்ப்பரேட் வசம் ஒப்படைக்க கூடிய சாலை போக்குவரத்து பாதுகாப்பு மசோதா 2019 என்ற பெயரில் ஒரு சட்டத்தை கொண்டு வர உள்ளது.
இந்த சட்டம் அமல்படுத்தப் பட்டால் போக்குவரத்து தொழில் அத்தனையும் தனியார் வசம் ஒப்படைக் கப்படும், ஓட்டுநர் உரிமம், வாகன உரிமம் புதுப்பித்தல் தனியார் முதலாளிகளிடம் சென்றுவிடும். டிங்கர், வெல்டர், பெயிண்டிங் உட்பட துணை தொழில்களும் கார்ப்பரேட் நிறுவனங் களிடம் செல்லும் என்பதால் இந்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். காப்பீடு, டோல்கேட், உரிமம் புதுப்பித்தல் கட்டணத்தை குறைக்க வேண்டும். பெட்ரோல் டீசல் விலை உயர்வு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
Next Story






