என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
டாக்டரை தாக்கிய தனியார் நிறுவன ஊழியர் கைது
டாக்டரை தாக்கிய தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்
புதுச்சேரி:
புதுவையை அடுத்த தமிழக பகுதியான கலைவாணர் நகர் குறிஞ்சி வீதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன். (வயது 48). இவர் ஒரு கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவருக்கும், வங்கியில் பணியாற்றும் இவரது மனைவி ஜீவிதாவுக்கும் திண்டிவனம்- புதுவை பைபாஸ் சாலை பட்டனூர் அருகே தகராறு ஏற்பட்டது.
அப்போது ஜனார்த்-தனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் ஜனார்த்தனன் மனைவி ஜீவிதா தப்பி ஓடி விட்டார். இதை பொதுமக்கள் வேடிக்கை பார்த்துள்ளனர். அப்போது சென்னையில் இருந்து புதுவை நோக்கி வந்தவர்கள் காரை நிறுத்தி டீ குடிக்க கடைக்கு வந்தனர். பின்னர் காருக்கு சென்ற அவர்கள் காருக்கு முன்னால் நிறுத்தி இருந்த ஜனார்த்தனன் மோட்டார் சைக்கிளை எடுக்கும்படி கூறியுள்ளனர்.
ஏற்கனவே கோபத்தில் இருந்த ஜனார்த்தனன் காரில் இருந்த நபரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அந்த நபர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து ஆரோவில் சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் விசாரணை மேற்கொண்டதில், காரில் வந்தவர் மகாத்மா காந்தி ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர் சந்திப் மனோகர் (29) என்பதும், சென்னை அண்ணா நகரை சேர்ந்த இவர் பிரபல அரசியல் பிரமுகரின் மகன் என்பதும் தெரியவந்தது.
டாக்டரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய ஜனார்த்தனனை போலீசார் போலீஸ் நிலையம் வரவழைத்தனர். அவர் தனது மனைவி கொடுத்த புகாரில் தான் போலீசார் விசாரணைக்கு அழைப்பதாக போலீஸ் நிலையம் வந்து தன்னுடைய மனைவியை பற்றி சரமாரி புகார் அளித்தார்.
பின்னர் போலீசார், டாக்டர் சந்திப் மனோகர் கொடுத்த புகாரின் பேரில் ஜனார்த்தனனை கைது செய்தனர். அப்போதுதான், ஜனார்த்தனன் தனது மனைவி போலீஸ் நிலையத்தில் புகார் ஏதும் கொடுக்கவில்லை. டாக்டரை தாக்கியதால் தான் கைது செய்யப்பட்டதை உணர்ந்தார். பின்னர் அவரை திண்டிவனம் கிளை சிறையில் அடைத்தனர்.
Next Story






