என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடந்த முதல் பட்டமளிப்பு விழாவில் கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி
புதுச்சேரியில் விரைவில் மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்கப்படும்- ரங்கசாமி அறிவிப்பு
புதுவையில் விரைவில் மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை அரசின் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக கலையரங்கத்தில் நடந்தது. புதுவை தொழில்நுட்பப பல்கலைக்கழகத்தின் வேந்தர் கவர்னர் தமிழிசை விழாவினை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., கல்வித்துறை செயலாளர் அசோக் குமார், சிகாகோ இலியனாஸ் பல்கலைகழக, நிலையான தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் கிருஷ்ணாரெட்டி, புதுவை தொழில்நுட்பப் பல்கலைக்-கழகத் துணை வேந்தர் டாக்டர் மோகன், பல்கலைக்கழக பதிவாளர் சிவராஜ், பேராசிரியர்கள், மாண-வர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
புதுவை பொறியியல் கல்லூரி தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக மாறி உள்ளது. டெல்லியில் உள்ள அதிகாரிகள்கூட புதுவை பொறியியல் கல்லூரியை பற்றி கேட்பார்கள். ஆசியாவி லேயே சிறந்த கல்லூரி என கூறுவார்கள். அதே நற்பெயரை தொழில்நுட்ப பல்கலைக்கழகம் பெற வேண்டும். கல்லூரிக்கு நற்பெயர் இருந்தால்தான் மாணவர்களுக்கு மரியாதை கிடைக்கும். அவர்களைத்தான் தனியார் நிறுவனங்கள் தேர்வு செய்யும். இங்குள்ள கல்லூரியில் பணியாற்றும் 200 பேராசிரியர்களில்
120-க்கும் மேற்பட்டோர் முனைவர் பட்டம் பெற்றவர்கள். இங்கு 90 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது.
அனைத்து காலி பணியிடங்களும் நிரப்பப்படும். இது புதுவை அரசின் முதல் பல்கலைக்கழகம். மருத்துவ பல்கலைக்கழகத்தை அரசு விரைவில் தொடங்க உள்ளது. புதுவை பொறியியல் கல்லூரியில் படித்தவர்களில் தெருவுக்கு 2 பேராவது வெளிநாட்டில் பணிபுரிகின்றனர். இங்கு படித்து பட்டம் பெறும் மாணவர்கள் புதுவைக்கு பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-
புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக மாற்றப்பட்ட பின் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கொரோனா தொற்றுக்கு பிறகு நடைபெறும் விழா. பெறுவதை காட்டிலும், கொடுப்பதில் இன்பம் அதிகம். உங்களுக்கு பட்டம் வழங்க கவர்னர், முதல்&-அமைச்சர் வந்துள்ளனர்.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல்-அமைச்சராக ரங்கசாமி பொறுப்பேற்ற பின் தேர்தலில் அளித்த வாக்குறுதி-களை நிறைவேற்றி வருகிறோம். 99 சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாநில-மாக புதுவை திகழ்கிறது.
முதல்-அமைச்சர் ரங்கசாமி கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கி ஆரம்பகல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை செலவிட்டு வருகிறார். பட்டம் பெற்றவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தின்படி அரசின் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். புதுவை மாநிலத்தை இந்தியாவில் முதலிடத்துக்கு கொண்டுவர வேண்டும் என செயல்படுகிறோம். பிரதமர் கூறியபடி பெஸ்ட் புதுவையை உருவாக்கி வருகிறோம்.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா புதுவைக்கு வந்து பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். புதுவைக்கு மத்திய அரசு உறுதுணையாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் புதுவை மாநிலத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட அரசாக திகழ்கிறது. மத்திய, மாநில அரசுகளுக்கு உறவுப்பாலமாக கவர்னர் தமிழிசை திகழ்கிறார். படிக்கும் இளைஞர்கள் அனைவருக்கும் அரசு வேலை வழங்க முடியாது.
இளைஞர்கள் நலனுக்காக ஸ்டார்ட் அப் இந்தியா என்ற திட்டத்தை பிரதமர் கொண்டு வந்துள்ளார். தொழில் முனைவோரை ஊக்கப்படுத்த இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
பல்வேறு திட்டங்கள் மூலம் நிதி ஒதுக்கி இளைஞர்களுக்கு அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
உங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உறுதுணையாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story






