என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜெயங்கொண்டத்தில் சத்துணவு அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தமிழ்நாடு அரசு சத்துணவு அங்கன்வாடி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களுக்கு நிரந்தர காலமுறை ஊதியம் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ 9,000 வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் காந்தி பூங்கா முன்பாக நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தாமோதரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளர் சங்க மாநில தலைவர் லூயிஸ் பிரான்சிஸ் கண்டன உரை நிகழ்த்தினார்.  

    ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு அங்கன்வாடி பணியாளர் நிரந்தர காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், சத்துணவு அங்கன்வாடி திட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்,

     ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு வழங்கும் ஓய்வூதியத்தை குடும்பநல ஓய்வூதியமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஜெயங்கொண்டம் ஒன்றிய தலைவர் ராமலிங்கம், ஒன்றிய தலைவர் கருப்பையா  மற்றும்  ஏராளமானோர் கலந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முடிவில்  ஒன்றிய செயலாளர் துரைராஜ் நன்றி கூறினார்.
    Next Story
    ×