என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    மரக்கன்றுகள் நடும் விழா

    கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ஜெயஙகொண்டம்  நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் அன்பரசி தலைமை தாங்கினார்.

    பரப்ரம்மம் கிளப்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனர் த.முத்துக்குமரன் 100 மரக்கன்றுகளை நட்டு, மாணவ, மாணவியர்களுக்கும் மரக்கன்றுகளை வழங்கி பேசியதாவது, காடுகளில் மரங்கள் மனித சமுதாயத்தால் 25 சதவீதம் வரை அழிக்கப்பட்டுள்ளது.

    மத்திய மாநில அரசுகள் மரங்கள் குறைந்துள்ள பகுதியில் மரக்கன்றுகள் நடவவும் வேளாண்மைத்துறை மூலம் நடப்படும் சவுக்கு, தைலம் பகுதிகளில் வெட்டப்படாத ஏனைய மரங்கள் நடவேண்டும்.

    ஒவ்வொருவர் வீட்டிலும் குறைந்தது 20 மரங்களை வளர்க்க வேண்டும். உலக வெப்பமயமாதலை தடுக்க ஒரே வழி  மரங்களை நடுவது தான் சிறந்தது, நமக்கு பின் வரும் சந்ததியினருக்கு நாம் இயற்கையான சூழலை விட்டு செல்வது நமது கடமையாகும் என்றார்.

    உட்கோட்டை பாலமுருகன், பதஞ்சலி மெஸ் சண்முகம்,பேராசிரியர்கள் மாரிமுத்து கோபிநாத் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் நாட்டு நலப்பணித் திட்டம் ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் நன்றி கூறினார்.
    Next Story
    ×