என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாரதிதாசன் நினைவுதினத்தையொட்டி பாரதி பூங்கா அருகே உள்ள அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து ம
பாரதிதாசன் சிலைக்கு ரங்கசாமி மரியாதை
புதுவை அரசு சார்பில் பாரதிதாசன் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை அரசு சார்பில் பாரதிதாசன் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.
இதனையொட்டி பாரதி பூங்காவில் அமைந்துள்ள பாரதிதாசன் திருவுருவச் சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சந்திர பிரியங்கா, கே.எஸ்.பி.ரமேஷ் எம்.எல்.ஏ. ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து ஈஸ்வரன் கோவில் வீதியில் அமைந்துள்ள பாவேந்தர் பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகத்தில் அலங்கரித்து வைக்கப் பட்டிருந்த பாரதிதாசனின் உருவப் படத்திற்கு அமை ச்சர்கள் லட்சுமிநாராயணன், சந்திர பிரியங்கா, அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், கே.எஸ்.பி. ரமேஷ் எம்.எல்.ஏ. ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் அரசுச் செயலர் நெடுஞ்செழியன், இயக்குநர் கந்தன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் தேசபக்திப் பாடல்கள் இசைக்கப்பட்டன.
Next Story






