என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதுவை-கடலூர் சாலை
புதுச்சேரி-கடலூர் சாலை சீரமைப்பு பணி தொடங்குமா?
புதுவை-கடலூர் சாலை சீரமைப்பு பணி விரைவில் தொடங்குமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு உள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை-கடலூர் சாலையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை முறையாக பராமரிக்-கப்படாமல் உள்ளது.
இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருவது தொடர் கதையாக உள்ளது.சாலை முழுவதும் பள்ளம் ஏற்பட்டு, மோசமான தன்மையால், விபத்துக்கள் அதிகரித்து பலர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பலர் தங்களின் உடல் உறுப்புகளை இழந்து, வாழ்க்கையை வாழ முடியாமல் தவித்து வரு-கின்றனர்.
இதனால், புதுவை-கடலூர் சாலையை விரிவாக்கம் செய்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனையடுத்து, சுமார் ரூ.17 கோடி செலவில், இந்த சாலையை சீரமைத்து தரம் உயர்த்திட முடிவு செய்யப்பட்டது. மேலும், காலாப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது போல் சாலையின் நடுவே தடுப்பு கட்டை அமைக்க கூடுதலாக 3 கோடி ரூபாய் மதிப்பீடு செய்-யப்பட்டது.
இதற்கான கூடுதல் நிதி கிடைக்காத நிலையில், சாலை தரம் உயர்த்தும் பணியும் தடைப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் புதுவை-கடலூர் சாலையை சீரமைப்பது எப்போது என பொது மக்கள் கேள்வி எழுப்பு-கின்றனர்.
மேலும் சாலையில் தெருவிளக்குகள் எரியாமல் உள்ளதையும் அவசர வேலையாக எடுத்து செய்ய வேண்டும் என்கின்றனர்.
இந்த நிலையில், விபத்துக்களை தடுக்கும் வகையில், போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் உத்தரவின் பேரில், கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார், முதல் கட்டமாக அதிக விபத்து ஏற்படும் நோணாங்குப்பம், எடையார்பாளையம் முக்கிய சந்திப்புகளில் பேரிகார்டுகள் வைக்கும் பணியில் ஈடுபட்டு வருவது பாராட்டுக்குரியது.
Next Story






