என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூவாகத்தில் இன்று மாலை கம்பம் நிறுத்தி தாலி கட்டும் நிகழ்ச்சி
கூவாகத்தில் இன்று மாலை கம்பம் நிறுத்தி தாலி கட்டும் நிகழ்ச்சி- 20-ந் தேதி தேரோட்டம்
கூவாகத்தில் நாளை வெளி மாவட்டத்தில் இருந்தும் வெளிமாநிலங்களில் தங்கி தாலி கட்டிக் கொண்டு விடிய விடிய கும்மியடித்து சந்தோஷமாக இருந்து மறுநாள் காலை 20-ந் தேதி தேரோட்டம் நடைபெறும்.
திருநாவலூர்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா திருநாவலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கூவாகம் கிராமத்தில் மிகவும் பழம்பெரும் வரும் பிரசித்தி பெற்ற இந்து அறநிலையத் துறைக்கு கட்டுப்பாட்டில் கூவாகம் கூத்தாண்டவர் சுவாமி ஆலயம் உள்ளது. இன்று மாலை கம்பம் நிறுத்தி மூன்றாம் தாலி கட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கு சுற்றுவட்டார பொதுமக்களும் வெளியூரிலிருந்து வந்து அரவாணிகளும் தாலி கட்டுவார்கள்.
நாளை வெளி மாவட்டத்தில் இருந்தும் வெளிமாநிலங்களில் தங்கி தாலி கட்டிக் கொண்டு விடிய விடிய கும்மியடித்து சந்தோஷமாக இருந்து மறுநாள் காலை 20-ந் தேதி தேரோட்டம் நடைபெறும். உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிகண்ணன் தேரோட்டத்தை தொடங்கி வைப்பார். தேரோட்டம் ஊர்வலமாக சென்று தெய்வநாயக செட்டியார் பந்தலடி அடைந்தபிறகு பொதுமக்கள் பக்தர்கள் அரவாணிகள் கணவரை நினைத்து கும்மியடித்து நெற்றியில் இருந்த பொட்டுகளை அழித்து பூசாரி கையால் தாலி அறுத்து விட்டு சோகத்துடன் அருகில் இருந்த கிணற்றில் குளித்து வெள்ளை புடவை உடுத்தி அவரவர் சொந்த ஊருக்கு செல்வார்கள். தர்மர் பட்டாபிஷேகம் 21-ந் தேதி நடைபெறும். அன்று திருவிழா நிறைவு பெறும்.
Next Story






