என் மலர்
உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவையும், கைதான வாலிபரையும் படத்தில் காணலாம்.
ஜோலார்பேட்டையில் ரெயிலில் 4 கிலோ கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர் கைது
ஜோலார்பேட்டையில் ரெயிலில் 4 கிலோ கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஜோலார்பேட்டை:
சேலம் ரெயில்வே உட்கோட்ட டிஎஸ்பி குணசேகரன் மேற்பார்வையில் சேலம் ரெயில்வே காவல் நிலைய சிறப்பு பிரிவினர் நேற்று ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகர் ரெயில் நிலையத்தில் இருந்து கர்நாடக மாநில எஸ்வந்த்பூர் வரை செல்லும் ரெயிலில் கஞ்சா கடத்துபடுகிறதா என சோதனை செய்து கொண்டு இருந்தனர்.
அப்போது வாணியம்பாடி ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டு இருக்கும் போது முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்த வட மாநில வாலிபரின் உடமைகளை சோதனை செய்தனர்.
அப்போது அவர் வைத்து இருந்த பையில் 4 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் வட மாநில வாலிபரை ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணை செய்ததில் ரெயிலில் கஞ்சா கடத்திய வாலிபர் ஒரிசா மாநில தன்பூர் பகுதியை சேர்ந்த ராஜு பெஷ்ரா (வயது 23) என தெரிய வந்தது.
இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story






