என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILE PHOTO
கார் மோதி ஓய்வு பெற்ற கால்நடைபராமரிப்பு உதவியாளர் பலி
கார் மோதி ஓய்வு பெற்ற கால்நடைபராமரிப்பு உதவியாளர் உயிரிழந்தார்.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம், விளாங்குடி விளாங்குடி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் குமார் (வயது 63). ஓய்வு பெற்ற கால்நடை பராமரிப்பு உதவியாளரான இவர், அங்குள்ள சுகாதார நிலையம் அருகேயுள்ள குடிநீர் குழாயில் தண்ணீரை பிடித்துக் கொண்டு, வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் திருச்சி&சிதம்பரம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் அதிவேகமாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து வந்த கயர்லாபாத் காவல் துறையினர், சடலத்தை மீட்டு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து கயர்லாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story