என் மலர்
உள்ளூர் செய்திகள்

மகா காளியம்மன் கோவில் திருவிழா.
மகா காளியம்மன் கோவில் தீமிதி திருவிழா
நாச்சியார்கோவில் மகா காளியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
சுவாமிமலை:
கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் மேல வீதியில் அமைந்துள்ள மகா காளியம்மன் கோவில் திருவிழா கடந்த 6ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது விழாவின் முக்கிய நிகழ்ச்சியான
தீமிதி திருவிழா நடைபெற்றது.இதில் சிறுவர்கள், பெண்-கள் உட்பட ஏராளமானோர் தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். ஜாதி மதங்களை கடந்து நாச்சியார்கோவில் அதன் சுற்றுவட்டாரப்
பகுதிகளில் கொரோனா தொற்றில் உயிரிழந்தவர்-களின் 80க்கும் மேற்பட்ட உடல்களை நல்லடக்கம் செய்த நாச்சியார்கோவில் தமிழ்நாடு முஸ்லிம் முன்-னேற்ற கழகத்தை சேர்ந்த இளைஞர்களை
மகா காளி-யம்மன் கோவிலில் வைத்து நிர்வாகிகள் மற்றும் தெருவாசிகள் சார்பில் சால்வை அணிவித்துநினைவு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
சமூக நல்லிணக்-கத்திற்கு எடுத்துக்காட்டாக பாராட்டு விழா நடைபெற்றது.
Next Story






