என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
போக்சோ சட்டத்தில் கூலிதொழிலாளி கைது
போக்சோ சட்டத்தில் கூலிதொழிலாளி கைது செய்யப்பட்டார்.
அரியலூர்:
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மருதுலமாணிக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா. கூலி தொழிலாளி.
இவர் ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு சுண்டிப்பள்ளம் கிராமத்திற்கு ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சிவா, சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடலூர் மாவட்டம் பெண்ணாடத்திற்கு அழைத்துச்சென்று சிவாவின் சித்தி வீட்டில் தங்க வைத்துள்ளார்.
இந்நிலையில் சிறுமியின் பெற்றோர்கள் தா.பழூர் போலீஸ் நிலையத்தில் தங்களது மகளை காணவில்லை என புகார் அளித்தனர். புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்துமகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சிவாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்
Next Story






