search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லங்குறிச்சி கலியபெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்ற காட்சி
    X
    கல்லங்குறிச்சி கலியபெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்ற காட்சி

    கல்லங்குறிச்சி கலியபெருமாள் கோவில் தேரோட்டம்

    கல்லங்குறிச்சி கலியபெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
    அரியலூர் :

    அரியலூர் அருகே கல்லங்குறிச்சி கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான கலியுகவரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் பெருந்திருவிழா மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று ஊரடங்கு அமலில் இருந்ததால் திருவிழா நடைபெறவில்லை.

    இந்த ஆண்டு கடந்த 10 ந்தேதி ராமநவமி அன்று கொடி ஏற்றத்துடன் திருவிழா துவங்கியது. தினசரி சூரிய வாகனம், வெள்ளி பல்லக்கு, வெள்ளி சேஷ வாகனம், வெள்ளி கருட வாகனம், வெள்ளி யானை வாகனம், கண்ணாடி பல்லக்கு, வெள்ளி சிம்ம வாகனம், புன்னை மரம் வாகனம், வெள்ளி குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலாவும், திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    திருவிழா காலங்களில் தினசரி நாதசுர இசை, திருமஞ்சனம், கிளாரினட், பொய்க்கால் குதிரை ஆட்டம், நாட்டியம், வேதபாராயணம், பஜனைகள், கிராமிய கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.

    விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. அதிகாலையில் சின்னதேரில் ஆஞ்சநேய சுவாமியும், பெரிய தேரில் கலியுகவரதராஜ பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகள் எழுந்தருளினர்.

    மலர்களில் அலங்கரிக்கப்பட்ட தேரினை ஆதீன பரம்பரை தருமகர்த்தா கோவிந்தசாமி படையாச்சியாரின் மகன்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

    திருவிழாவினை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி உத்தரவின் பேரில் இன்று உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்-பட்டிருந்தது. பக்தர்கள் வருகையை முன்னிட்டு தண்ணீர் பந்தல், அன்னதானம், தங்கும் வசதி, குடிநீர்வசதி, மருத்துவ வசதிகள் அமைக்கப்பட்டிருந்தது,  

    அரசு போக்குவரத்து கழகம், சார்பில் திருச்சி, தஞ்சை, கும்பகோணம், சேலம், துறையூர், ஜெயங்கொண்டம், விருத்தாசலம், திட்டகுடி, ஆகிய பகுதிகளிலிருந்து விழாக்கால சிறப்பு பஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


    திருவிழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகளை திருக்கோவில் ஆதீனபரம்பரை தருமகர்த்தா கோ.கோவிந்-தசாமி படையாச்சியார் குமாரர்கள், கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். நாளை (19 ந்தேதி) ஏகாந்த சேவை, சுவாமி ஊர்வலம் சிறப்பாக நடைபெறவுள்ளது.
    Next Story
    ×