என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சித்ரா பௌர்ணமியையொட்டி அரியலூர் ஒப்பில்லாத அம்மனுக்கு பால்குடம் சுமந்து செல்லும் பக்தர்கள்.
    X
    சித்ரா பௌர்ணமியையொட்டி அரியலூர் ஒப்பில்லாத அம்மனுக்கு பால்குடம் சுமந்து செல்லும் பக்தர்கள்.

    சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு

    சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    அரியலூர்:

    சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் உள்ள மகா காளியம்மன், மாரியம்மன் மற்றும் சுப்ரமணியர், செட்டி ஏரிக்கரை விநாயகர் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.  

    பால், தயிர், சந்தனம், திரவியப் பொடி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் சுவாமிகளுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, தீபதராணை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இது போல் திருமானூர், ஜயங்கொண்டம், செந்துறை, உடையார்பாளையம், மீன்சுருட்டி, ஆண்டிமடம் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    பழமை வாய்ந்த ஒப்பில்லாத அம்மன் கோயிலில் சித்ரா பௌர்ணமியையொட்டி பால்குடத் திருவிழா சனிக்கிழம்ஷ நடைபெற்றது. வஞ்சத்தான் ஓடையில் இருந்து பக்தர்கள் பால்குடங்களை சுமந்துக் கொண்டு முக்கிய வீதி வழியாக சென்று கோயிலை அடைந்தனர்.

    பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பாலைக் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபதாரணை காண்பிக்கப்பட்டது.

    சென்னை,கடலூர்,புதுக்கோட்டை, தஞ்சாவூர் சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் அம்மாளை தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×