என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்கொள்முதல் நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டிய போது எடுத்த படம்.
    X
    நெல்கொள்முதல் நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டிய போது எடுத்த படம்.

    தாழக்குடி பேரூராட்சியில் ரூ.13 லட்சம் செலவில் நெல் கொள்முதல் நிலையம் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.அடிக்கல் நாட்டினார்

    தாழக்குடி பேரூராட்சியில் ரூ.13 லட்சம் செலவில் நெல் கொள்முதல் நிலையம் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.அடிக்கல் நாட்டினார்
    ஆரல்வாய்மொழி. ஏப்.16-

    தோவாளை தாலுகா தாழக்குடி பேரூராட்சியில் சுற்றுவட்டார விவசாயிகளின்  நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை பாதுகாப்பாக வைக்க போதிய இடவசதி இல்லை.

     நெல்லை    பாதுகாப்பற்ற முறையில் கொட்டி வைக்கப்படும் நிலை காணப்பட்டது.  இதனை யொட்டி அந்தப் பகுதி விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கட்டிடம் வேண்டும் என்று தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. விடம் கோரிக்கை வைத்தனர்.

    கோரிக்கை அடிப்படையில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.  ரூ.13 லட்சம் ஒதுக்கீடு செய்தார். இதற்கான  அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது.  இந்த நிகழ்ச்சியில் தோவாளை ஒன்றிய  தலைவர் சாந்தினி பகவதியப்பன், தாழக்குடி பேரூராட்சி மன்ற தலைவர் சிவக்குமார், தாழக்குடி நகர செயலாளர் அய்யப்பன்,

     தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கடன் சங்க தலைவர் பிரமநாயகம் பிள்ளை, ஒன்றிய செயலாளர் மகாராஜா பிள்ளை, வங்கி செயலாளர் நாகரத்தினம், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ரோகிணி அய்யப்பன், வார்டு உறுப்பினர்கள் ரவி பிள்ளை, ஜெயந்தி, பார்வதி, வங்கி இயக்குனர்கள் குமார், கஸ்தூரி, லட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நெல் கொள்முதல் நிலையத்-திற்கு கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கிய தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ.வுக்கு அப்பகுதி விவசாயிகள் நன்றி தெரிவித்தார்கள்.
    Next Story
    ×