என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதியமான் சிலைக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    X
    அதியமான் சிலைக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அதியமான்கோட்டையில் வள்ளல் அதியமான் பிறந்த நாள் விழா

    தருமபுரி அடுத்த அதியமான்கோட்டையில் வள்ளல் அதியமான் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை ஊராட்சியில் உள்ள வள்ளல் அதியமான் கோட்டத்தில் சித்ரா பவுர்ணமியையொட்டி இன்று - வள்ளல் அதியமான் பிறந்த நாள் அரசு விழாவாக நடைபெற்றது. 

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா கலந்து கொண்டு வள்ளல் அதியமான்  திருவுருவ சிலைக்கும், அவ்வை யார்  திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில்  முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் எம்.எல்.ஏ.,  அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, பா.ம.க  எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே. மணி, எஸ்.பி வெங்கடேஸ்வரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன், நல்லம்பள்ளி ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி, அதியமான் கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் முனிராஜ், கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி, நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய தி.மு.க.  செயலாளர் ஏ.எஸ்.சண்முகம், நல்லம்பள்ளி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சிவப் பிரகாசம், மற்றும் அரசு அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அதியமான் மற்றும் அவ்வையார் சிலைக்கு மாலை அணி வித்து  மரியாதை செலுத்தினர்.

    Next Story
    ×