என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய கோரி மனு
சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய கோரி மனு அளித்தனர்.
அரியலூர் :
அரியலூர் நகராட்சி கமிஷனர் சித்ரா சோனியாவிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன் மாவட்ட குழு உறுப்பினர் துரைசாமி, ஒன்றிய செயலாளர் துரை அருணன் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்தக் கோரிக்கை மனுவில்தமிழக அரசு, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி உள்ளாட்சி அமைப்புக்களுக்கான சொத்துவரி உயர்த்துவதற்கு அரசாணை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு, மாநில திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யும் போது மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் உரிமைகளை பறிக்கிற வகையில் நிபந்தனைகள் எதுவும் விதிக்க கூடாது.
ஆனால், தற்போதைய மத்திய அரசின் நடவடிக்கைகளும், அதற்கேற்ப மாநில அரசின் அரசாணையும் முழுமையாக உள்ளாட்சி அமைப்புகளின் உரிமைகளை பறித்துவிட்டது. எனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதனை வன்மையாக கண்டிக்கிறது.
நெடுங்காலமாக உள்ளாட்சி அமைப்புகளில் தீர்மானிக்கப்படும் சொத்துவரியை, உள்ளாட்சி அமைப்புகள் தான் தீர்மானிக்கும். சென்னை போன்ற நகரங்களில் இருக்க கூடிய வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளினுடைய சொத்து மதிப்பும் தமிழகத்தின் இதர பகுதிகளில் இருக்க கூடிய மதிப்பும், வியாபாரமும் பெருமளவு மாறுபட்டது.
வளர்ந்த பகுதிகளுக்கும், வளர்ச்சியடையாத பகுதிகளுக்கும் ஒப்பீடு செய்யவே முடியாது. 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ள வரி உயர்வு பெரும் சுமையை ஏற்படுத்தும்.
அரியலூர் நகரில் 70 சதவீதம் ஏழை நடுத்தர மக்கள் வாடகை வீட்டில் வசிப்பவர்கள். வீட்டு வரி உயர்வால் வாடகை உயரும் அபாயம் இருக்கிறது. அதேபோல ஆயிரக்கணக்கான சிறு வியாபாரிகள், கடைகளை வாடகைக்கு எடுத்து வியாபாரம் செய்து வருபவர்களுக்கு வாடகை கடுமையாக உயரும் சூழலும் உள்ளது.
எனவே தாங்கள் இந்த வரி உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story