என் மலர்
உள்ளூர் செய்திகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திருபுவனையில் ஆர்ப்பாட்டம்நடத்தினர்.
திருபுவனையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பனை மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திருபுவனையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:
புதுவை- விழுப்புரம் நெடுஞ்சாலையில் சென்னை& நாகப்பட்டினம் சாலைக்கான விரிவாக்க பணி நடைபெற்று வருகின்றது. அதனை தொடர்ந்து திருபுவனையில் பழமையான ஏரிக்கரையில் உள்ள பனை மரங்களை அகற்றி சாலை அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் இயற்கையான நீர்நிலைகளை காப்பாற்ற வேண்டும், பனை மரங்களை அகற்ற கூடாது என்று வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு திருபுவனை தொகுதி செயலாளர் ஈழவளவன் தலைமை தாங்கி கண்டன உரை நிகழ்த்தினார். இந்த போராட்டத்தில் மருத்துவர் அணி மாநில செயலாளர் முரளிதரன், தமிழக்கனல், வணிகர் அணி சரவணன், வாணிதாசன், சிந்தனைச்செல்வன், விஜயன், தே.விஜயசங்கர், சந்திரசேகர், வினோத், வேலு, மாரிமுத்து, ஆசைத்தம்பி, மாயவன், வெற்றிவேல், நித்தியானந்தம் அமுல்ராஜ், வள்ளுவன், தென்னாட்டு காந்தி, திவாகர் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் பள்ளி- கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






