என் மலர்
உள்ளூர் செய்திகள்

அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி பா.ஜனதா பட்டியல் அணி சார்பில் நடந்த பேரணி நடைபெற்றது
பா.ஜனதா சார்பில் பிரம்மாண்ட பேரணி
அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி பா.ஜனதா சார்பில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுவை பா.ஜனதா பட்டியலின அணி சார்பில் அம்பேத்கர் 131-வது பிறந்த நாளையொட்டி அக்கட்சியினர் பேரணியாக சென்று சட்டசபை வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
அம்பேத்கரின் 131-வது பிறந்தநாள் நாளை புதுவை, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகளில் பா.ஜனதா பட்டியல் அணி சார்பில் அவரது பிறந்த நாள் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இன்று ராஜா திரையரங்கம் சந்திப்பில் இருந்து புதுவை பா.ஜனதா பட்டியல் அணி தலைவர் தமிழ்மாறன் தலைமையில் பேரணி சென்றது.
பேரணியை புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் செல்வகணபதி எம்.பி., பா.ஜனதா பட்டியல் அணி பொறுப்பாளர் அசோக்பாபு எம்.எல்.ஏ., எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், ரிச்சர்டு, வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம், பொதுச்செயலாளர் மோகன்குமார், பா.ஜனதா துணை தலைவர் செல்வம், மாநில செயலாளர் ஜெயகுமார் ரெட்டியார், மூத்த தலைவர் எஸ்.கே.ஜி. கஜேந்திரன் மற்றும் பா.ஜனதா மாநில பொறுப்பாளர்கள், பட்டியலின அணி நிர்வாகிகள் திரளாக பங்கேற்கின்றனர்.
பேரணி நேரு வீதி வழியாக சட்டசபை எதிரே உள்ள அம்பேத்கர் சிலை சென்றடைந்தது. அங்கு அவரது சிலைக்கு பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், அமைச்சர் நமச்சிவாயம், பட்டியல் அணி தலைவர் தமிழ்மாறன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அக்கட்சியினருக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா பட்டியல் அணி சிறப்பு அழைப்பாளர்கள் அருள், சுப்பிரமணி, நாகராஜ், பிரகாஷ், அரியாங்குப்பம் மாவட்ட தலைவர் ராஜாராம், பொதுச்செயலாளர் காத்தவராயன், உழவர்கரை மாவட்ட தலைவர் ராஜகுரு, பொதுச்செயலாளர் வெற்றிவேல், ராமு, வில்லிய-னூர் மாவட்ட தலைவர் வின்னரசன், நிர்வாகிகள் சரவணன், வீரப்பன், வில்லியனூர் காமாட்சி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதேபோல் புதுவையில் மண்டல வாரியாக அம்பேத்கர் பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டு அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி பா.ஜனதா பட்டியல் அணி சார்பில் ஏழை எளிய மாணவ- மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
Next Story






