என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆர்ப்பாட்டம்
    X
    ஆர்ப்பாட்டம்

    ரிஷிவந்தியத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    ரிஷிவந்தியத்தில் சத்துணவு துறையில் காலியாக உள்ள பொறுப்பாளர், சமையலர், உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்படபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
    சங்கராபுரம்:

    ரிஷிவந்தியம் ஒன்றிய தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் தெய்வானை தலைமை தாங்கினார். துணை தலைவர் அலமேலு, மாவட்ட இணை செயலாளர் யேசுமணி, ஒன்றிய செயலாளர் இந்துமதி ஆகியோர் கலந்து கொண்டனர். சத்துணவு துறையில் காலியாக உள்ள பொறுப்பாளர், சமையலர், உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்படபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. 

    இதில் மாநில செயற்குழு உறுப்பினர் காஞ்சனாமேரி, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஜாகீர் உசேன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் ரவி, ஒன்றிய பொருளாளர் லட்சுமி மற்றும் சத்துணவு பொறுப்பாளர்கள், உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நிர்வாகிகள் அனைவரும் ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணசாமியை சத்தித்து தங்களது கோரிக்கை குறித்த மனுவை அளித்தனர்.
    Next Story
    ×