என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆர்ப்பாட்டம்
    X
    ஆர்ப்பாட்டம்

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

    தியாகதுருகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்க மாவட்ட இணைச்செயலாளர் ரஷிதா தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரசேகர், தயாபரன், ஒன்றிய செயலாளர் முத்துலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் மனோன்மணி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர் சங்க மாவட்ட தலைவர் கொளஞ்சிவேலு கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் சத்துணவு பொறுப்பாளர்கள், உதவியாளர்கள், சமையலர்கள் ஆகியோருக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தை மாற்றி, வரையறுக்கப்பட்ட ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு பாதுகாப்புடன் கூடிய ஓய்வு ஊதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும்.

    சமையல் உதவியாளர்ககளுக்கு தகுதிக்கு ஏற்ப பதவி உயர்வு வழங்கிட வேண்டும். பேறுகால விடுப்பு பணி 12 மாதமாக வழங்கிட வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண் டனர். முடிவில் ஒன்றிய தலைவர் பழனிவேல் நன்றி கூறினார்.

    Next Story
    ×