என் மலர்
உள்ளூர் செய்திகள்

தற்கொலை செய்து கொண்ட காவலாளி மதியழகன்
ரெயில் முன்பாய்ந்து காவலாளி தற்கொலை
குடும்ப பிரச்சினை காரணமாக ரெயில் முன்பாய்ந்து காவலாளி தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை 100 அடி சாலை ரெயில்வே கேட் அருகே முதியவர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு தலை, கை துண்டாகி இறந்து கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த முதியவர் கஸ்தூரிபாய் நகர் ஜீவானந்த வீதியை சேர்ந்த மதியழகன் (வயது 58) என்பதும் மேட்டுபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் வேலைக்கு செல்வதற்காக சென்றபோது தனது பையை ரெயில்வே தண்டவாளம் அருகே வைத்து விட்டு சென்னையிலிருந்து புதுவை வந்த ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் போலீசார் விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக மதியழகன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இறந்து போன மதியழகனுக்கு குளோரியா (55) என்ற மனைவியும், ஷாலினி (21) என்ற மகளும் உள்ளனர். ரெயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






