என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
ரெயில் தண்டவாளத்தில் காயங்களுடன் வாலிபர் உடல்
ரெயில் தண்டவாளத்தில் காயங்களுடன் கிடந்த வாலிபரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை
அரியலூர் :
அரியலூர்,- பெரம்பலூர் சாலை ரெயில்வே மேம்பாலத்தின் கீழே தண்டவாளத்தில், பலத்த காயங்களுடன் கிடந்த வாலிபரின் உடலை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த ரெயில்வே காவல் துறையினர் மீட்டு, அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், அவர், அரியலூர் வாலாஜா நகரம், அண்ணா நகரைச் சேர்ந்த மருதமுத்து மகன் பூபாலன்(வயது34) என்பதும், ரெயில்வே கேட் அருகேயுள்ள டாஸ்மாக் கடைக்கு வந்து மது அருந்தி,
அப்பகுதியிலேயே போதையில் தண்டவாளம் அருகே மயங்கிக் கிடந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, ஏதேனும் இரவுநேர ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது யாராவது அடித்து கொலை செய்திருப்பார்களா என்ற கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Next Story