என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர்:
தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சத்துணவு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையான காலமுறை ஊதியம் வழங்குவதாக முதல் அமைச்சர் தேர்தல் அறிக்கையில் அறிவித்ததை செயல்படுத்த வேண்டும்.
குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். தேவைக்கேற்ப எரிவாயு சிலிண்டர்களை அரசே வழங்க வேண்டும். சமையல் உதவியாளர் அனைவருக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் மற்றும் திருமானூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய தலைவர் சாந்தி தலைமை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் முருகானந்தம் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார்.
ஒன்றிய செயலாளர் மகாலட்சுமி, இணைச் செயலாளர் விஜயகுமாரி, பொருளாளர் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் சிபி ராஜா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கருணாநிதி,
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கஸ்தூரி, சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஷர்மிளா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் ஆனந்தவள்ளி நன்றி கூறினார்.
திருமானூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தை அரசு ஊழியர் சங்க தலைவர் ராமராஜ் தொடங்கி வைத்தார். சூசை ராஜ் தலைமை வகித்தார். அனுசியா மற்றும் செல்வி முன்னிலை வகித்தனர். கவிதா வரவேற்புரை நிகழ்த்தினார்.நிகழ்ச்சியின் நிறைவாக ஜெயக்கொடி நன்றி கூறினார்.
Next Story






