என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாயம்
    X
    மாயம்

    கள்ளக்குறிச்சியில் கல்லூரி மாணவி திடீர் மாயம்

    கள்ளக்குறிச்சியில் கல்லூரி மாணவி திடீரென மாயமானது குறித்து தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கள்ளக்குறிச்சி:

    கடலூர் கோண்டூர் பகுதியை சேர்ந்த சிவக்குமார் மகள் ராகபிரியா (வயது 24). இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் கல்வியியல் கல்லூரியில் பி.எட்., 2ம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் அதே கல்லூரி வளாகத்தில் உள்ள மகளிர் விடுதியில் தங்கி உள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று ராகபிரியா வீட்டுக்கு செல்வதாக விடுதியில் கடிதம் கொடுத்து விட்டு சென்றார். ஆனால் அவர் வீட்டிற்கு செல்லவில்லை. இது குறித்து தகவல் அறிந்த அவரது தந்தை சிவக்குமார் மகளை கண்டுபிடித்து தருமாறு கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    மேலும் புகார் மனுவில் கடந்த 2020-ம் ஆண்டு தனது மகள் கடலூரில் இருந்தபோது சுயநினைவு இல்லாமல் காணாமல் சென்று விட்டதாகவும் இது குறித்து அப்போது கடலூர் என்.டி. போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கண்டு பிடித்ததாகவும் கூறியுள்ளார்.
    Next Story
    ×