என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நடந்த போது எடுத்த படம்.
    X
    குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நடந்த போது எடுத்த படம்.

    தேவாலயங்களில் குத்தோலை ஞாயிறு பவனி

    அனைத்து தேவாலயங்களில் குத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.
    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த வரதாராசன்பேட்டை முக்கிய வீதிகளில் கிறிஸ்தவர்கள் குருத்தோலையை கையில் ஏந்தியாவாறே ஓசான்னா கீதத்தை முழங்கியபடி ஊர்வலமாக சென்றனர். அதனை தொடர்ந்து புனித அலங்கார அன்னை ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறையொட்டி பங்கு தந்தை பெலிக்ஸ்சாமுவேல் தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது.

    அரியலூரிலுள்ள புனித லூர்து அன்னை ஆலயத்தின் கத்தோலிக்க திருச்சபை மற்றும் சி.எஸ்.ஐ. ஆலயத்தின் தென்னிந்திய திருச்சபை ஆகியவற்றின் சார்பில் குருத்தோலை பவனி நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து புனிதப்படுத்தப்பட்ட குருத்தோலையை கிறிஸ்தவர்கள் தங்களது வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.

    குருத்தோலை பவனி நிகழ்ச்சியில் அரியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான கிறிஸ்வதர்கள் கலந்து கொண்டனர்.

    தென்னூர் அன்னை லூர்து ஆலயம், ஆண்டிமடம் புனித மார்ட்டினார் ஆலயத்திலும் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு, குருத்தோலை பவன நிகழ்ச்சி நடைபெற்றன. ஏலாக்குறிச்சியிலும் குருத்தோலை ஊர்வலம் நடைபெற்றது. ஏலாக்குறிச்சி பேருந்து நிலையத்தில் திரண்ட கிறிஸ்தவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக குருத்தோலைகளை கையில் ஏந்திக் கொண்டு புனித அடைக்கல அன்னை ஆலயத்தை அடைந்தனர். அதனைத் தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    இதே போல் திருமானூர் புனித அருளானந்தார் ஆலயம், புதுக்கோட்டை தூய மங்களமாத ஆலயம், குலமாணிக்கம், கோக்குடி கிராமங்களிலுள்ள புனித இஞ்ஞாசியர் ஆலயம் மற்றும் ஆண்டிமடம், செந்துறை, மீன்சுருட்டி உள்ளிட்ட தேவலாயங்களில் பங்கு தந்தையர்கள் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நடைபெற்றது.

    Next Story
    ×