என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராணிப்பேட்டை ஆர்.டி.ஓ. அலுவலகம் எதிரே மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆர்பாட்டம் நடந்த போது எடுத்த படம்.
ராணிப்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை:
பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து ராணிப்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.
மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், சொத்துவரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story






