என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட வாலிபர்.
    X
    தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட வாலிபர்.

    ரெயில் நிலைய வளாகத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

    புதுவை ரெயில் நிலைய வளாகத்தில் வாலிபர் தூக்கு போட்டு பிணமாக தொங்கினார்.
    புதுச்சேரி:

    புதுவை ரெயில் நிலையம் கிழக்கு வாயில் பகுதியில் உள்ள வேப்பமரத்தில் 25 வயது மதிக்கத்தக்க  ஒரு வாலிபர் சேலையால் தூக்கு போட்டு பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தார். 
    அப்போது அங்கு ரோந்து வந்த ரெயில் நிலைய போலீசார் இதனை கண்டு ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
     
    போலீசர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். 
    மேலும் வழக்கு பதிவு செய்து தற்கொலை செய்த வாலிபர் யார்?எந்த ஊர்? என்பது குறித்தும் தற்கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×